Tuesday, August 18, 2009

SUPERSTARS 1

SUPERSTAR

எனக்கு ரொம்ப நாளா இருக்குற ஒரு கேள்வி சூப்பர் ஸ்டார் இந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் யார் ? எனக்கு ரஜினியை பிடிக்கும் , கமல் , விஜய்,அஜித், அமிதாப் , சிரஞ்சீவி,மகேஷ் பாபு , ஷாருக் கான் , ஆமிர் கான்,சல்மான் கான் , சூப்பர் ஸ்டார்ஸ் பற்றி பார்க்கும் முன்பு இந்த ஸ்டார்ஸ் பற்றி எனக்கு தெரிந்ததை உங்களுடன் , பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ,

விஜய்:
அப்பா ஒரு பிரபல இயக்குனர் , அம்மா ஒரு பின்னணி பாடகி ,என்றிருந்த விஜய் க்கு சினிமா வாய்ப்பு, அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை , தனது சொந்த கம்பெனி யில் தனது மகனை ஹீரோ வாக்கினார் சந்திரசேகர் அவர்கள்.... எப்போதுமே அவர் படங்களில் புரட்சி என்ற ஒரு கதை யை சொல்லுவார்

அதே போல் தான் தனது மகனின் முதல்(நாளைய தீர்ப்பு) படத்திலும் தனது புரட்சி கதையை உபயோகபடுத்தினார்.ஆனால் குருவி தலையில் பனங்காய் ஐ சுமக்க முடியவில்லை , படம் DECLARED AS FLOP,

ஆனால் மறுபடியும் மகனை வைத்து படம் (செந்தூர பாண்டி)எடுக்க நினைத்தார் , COMMERCIAL ASPECTS தான் படத்துக்கு முக்கியம் என்று நினைத்து , கேப்டன் விஜயகாந்திடம் கதை சொல்லி அவருடன் விஜய் ஐ நடிக்க வைத்தார் , எதிர்பார்த்தபடியே படம் ஹிட், வெற்றிக்கு முழு காரணம் விஜயகாந்த் என்பது பலருக்கு தெரிந்த ஒரு விஷயம்.

அடுத்த விஜய் படம் ரசிகன் , முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் தான் அது, நம் அனைவருக்கும் தெரிந்த படம் தான் அது.இந்த படமும் ஓரளவுக்கு நன்றாக தான் ஓடியது (விஜய் முதலில் சொந்த குரலில் பாடியது இந்த படத்தில் தான் )

அடுத்து தேவா, ராஜாவின் பார்வையிலே.விஷ்ணு , சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை,எல்லாம் சுமாராக ஓடிய படங்கள் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் சிறிது சிறிதாக அதுவும் குழந்தைகளின் மனதில் பசு மரத்தாணி போல் பதிய ஆரம்பித்து விட்டார்.இவற்றில் ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் விஜயும் அஜித்தும் முதலும் கடைசியுமாக இணைந்து நடித்த படம்

விஜய் film career la யே பூவே உனக்காக ஒரு turning point ஆ அமைந்தது, அதற்கு விக்ரமன் என்ற மாபெரும் இயக்குனரின் உழைப்பு , B & C centre audience ஐ எப்படி வசப்படுத்தனும் அப்படிங்கற ஒரு technique விக்ரமன்க்கு நல்லா தெரியும்.அந்த படம் 275 நாட்கள் தாண்டி ஓடினது னா அதுக்கு கதை ஒரு முக்கிய காரணம் , எந்த ஒரு படம் B,C audience க்கு பிடிக்குதோ அந்த படத்துக்கு casting oru problem இல்லை .பூவே உனக்காக படம் பல மொழிகளில் remake செய்யப்பட்டு நல்ல வெற்றியை பெற்றது .நம்ம age பசங்களுக்கு விஜய் ஐ இந்த படத்தில் இருந்துதான் பிடிக்க ஆரம்பித்தது , ரொம்ப பஞ்ச் வசனங்கள் இல்லை , அந்த 96 la ஒரு trend இருந்தது ,அதாவது லவ் dialogues வித விதமா படத்தில பேசுவாங்க , பாத்து காதல், பாக்காம காதல் னு ஓவரா இருக்கும் , ஆனால் இந்த படத்தில "ரோஜா வை வச்சி வசனம் பேசி படத்தை வெள்ளி விழா கொண்டாட வைத்தது.
விஜய்க்கும் ஆர்.பி.சௌத்ரி யும் வெற்றி கூட்டணி ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான்

அடுத்து வசந்த வாசல்,மாண்புமிகு மாணவன்,செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ் மோர் வரைக்கும் சுமாரான படங்கள் , ஆனால் முன்பு சொன்ன மாதிரி அஸ்திவாரம் வெயிட் ஆ போட்டு விட்டார்.

லவ் டுடே விஜயின் இன்னொரு வெற்றிப்படம் ,அதே ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு , இந்த படம் தெலுங்கில் பவன் கல்யான் நடித்து remake செய்யப்பட்டு வெற்றியை பெற்றது,

இந்த ரீமேக் concept அ ரொம்ப படங்களில் விஜய் follow பண்ணினார்

காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய்,நெஞ்சினிலே,பிரியமானவளே,ப்ரண்ட்ஸ்,பத்ரி,ஆதி,வசீகரா,போக்கிரி , வில்லு வரைக்கும் ரீமேக் டெக்னிக் தான் ........

ஆனால் படம் வெற்றி என்பது இப்போ பந்தயம் மாதிரி ஆகி விட்டது.முப்பது கோடி செலவு பண்ணி படம் எடுத்தால் லாபம் வர முதல்ல நாம் கதைய நம்பனும், நல்ல கதை அமைஞ்சாலும் இப்போ making oru periya problem

கதைய நம்பனும் னா பட்ஜெட் ல தான் படம் எடுக்கனும்........

விஜயை பற்றி நிறைய சொல்லலாம் .ஆனால் நம்ம பசங்க திட்டுவாங்க

so உங்க replies வச்சி தான் இனி நம்ம பேச முடியும் ...........

Monday, August 17, 2009

மெப்கோ 2nd semester

1st February 2006 11.00 PM la "05M_ _" உதயமானது
1st class la hemalatha mam physics class வந்தாங்க, முதல் நாள் class la லேட் ஆ நானும் booge யும் கிளாஸ் க்கு வந்தோம். mechanical fulla 60 பசங்க , class a பார்க்கவே செம பூரிப்பா இருக்கும் ,
லிங்கேஸ்வரி னு ஒரு மேடம் சிவில் பேப்பர் எடுத்தாங்க , அப்போ அப்போ கிளாஸ் ல கொஞ்சம் interactive session வைப்பாங்க.
2nd sem la 1st day class முடிஞ்சதும் எங்களை அந்த பேய் wing la இருந்து shift பண்ணிட்டாங்க 1st floor la இருந்து ground floor ku மாத்திட்டாங்க , உண்மையா சொன்னா நான் ground floor வந்த பின்னாடி தான் எல்லா பசங்க கிட்டயும் நல்லா பழக முடிந்தது ,ashly cell தைரியமா use பண்ண முடிந்தது , so room shifting எங்களுக்கு ஒரு benefit தான்.

ஒரு நாள் கிளாஸ் ல லிங்கேஸ்வரி mam class la ulla ellaa pasanga names தெரியுமா னு கேட்டங்க எல்லோரும் கொஞ்சம் தினறிட்டோம், but kabilash geth tha எல்லோருடைய names சொன்னான்.செம memory power அவனுக்கு ....

அதே mam class ல தான் அன்பு மிமிக்ரி பண்ணினான் , அப்போ இருந்து தான் அன்பு வை எனக்குத் தெரியும் , cricket ஆடுவான் , dance , mimicry multi talented personality , இவ்ளோ தான் அன்பு என் mindset la இருந்தான்.

2nd sem la என்னோட முக்கியமான நண்பன் பாக்கியராஜ் ....... நானும் அவனும் ஒரே பெஞ்ச் ல தான் (கடைசி பெஞ்ச்) பாக்கியராஜ் எனக்கு பிடிக்க காரணம் சிரிசிட்டே எவ்ளோ திட்டினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டான் , கோபமா பேசினா செம கடுப்பா ஆகிடுவான். நண்பர்களை அவ்வளவு தூரம் மதிக்கும் ஒரு நண்பனை அப்போ தான் முதன் முதலா நான் பார்த்தேன்... பசங்களை வீட்டுக்கு கூப்பிட்டு போய் செம விருந்து கொடுப்பான், ( now i miss u so much da packi)

சரவணா booge aravindan sathish packi myself தான் ஒண்ணா உட்கார்ந்திருப்போம் ,சரவணா க்கும் முதல்ல பிடிக்காம இருந்தது , அப்புறம் சரவணா நல்லா க்ளோஸ் ஆகிட்டான், அப்புறம் முதல்ல இருந்த ஒரு பிரிவினை எங்களை விட்டு மொத்தமாக நீங்கியது.

எல்லா காலேஜ் ல யும் எப்பவுமே gang war இருந்துட்டே இருக்கும். but enga set romba best ever in mepco college

Saturday, August 15, 2009

மெப்கோ 2005-2009 1st semester

என் வாழ்க்கையில் மெப்கோ வின் பங்கு மகத்தானது .இந்த post la just நம்ம காலேஜ் ல நம்ம நினைவுகளை தான் share பண்ண போறேன். friends உங்களோட நினைவுகளையும் இதில் share பண்ணிக்குவோம்...
1ST SEMESTER
2005 august 17 th காலேஜ் started. அப்போ நான் மெப்கோ ல சேருவதற்கு ரொம்ப feel பண்ண time..பெரிய காலேஜ் பசங்க நல்லா பேசுவாங்களோ னு ஒரு பயம் எப்போதும் இருந்தது
17th night 8 மணிக்கும் வார்டன் rules பேச ஆரம்பிச்சிடாங்க .....ரூம் குள்ள ஒரு 5 பேர் ஒண்ணா கதை பேசிட்டு இருந்தாங்க .... they are anantha venkatesh, sivapagan, praveen .senthil nathan, aravindan (சத்தியமா இவங்க தான் என்னோட close frens ஆ வர போறாங்க னு நினைத்து கூட பாக்கல ) எல்லோரும் மதுரை பற்றி பெருமை யா பேசிட்டு இருந்தாங்க ...
next day morning GOOD MORNING nu sonnan ஒரு சுருட்டை முடி காரன் ..... உன் பேர் என்ன னு கேட்டதற்கு ASHLY னு சொன்னான். ரொம்ப காமெடி ஆ பேசினான் .... ஒரே நாள் ல நான் home sick அப்படிங்கற விஷயத்தையே மறந்துட்டேன்...

17 th i went to ma class 1ST YEAR A SECTION . MY NUMBER IS 05050....CLASS ல முதல் நாளே ஒரு பையன் T SHIRT போட்டு வந்தான் .அப்போ ராஜா சார் தம்பி hereafter you should not wear these dresses னு சொன்னார் ....அதுக்கு அந்த பையன் முறைச்சிட்டே உட்கார்ந்தான் ...அவன் பேர் பிரவீன் ...

18th class physics or chemistry lab aa nu confusion எங்களுக்கு ...appo MEERAN sat nearby me . homesick fella he was..... அப்போ தான் அறிமுகம் ஆனான் ... saturday ஆனா சிரிப்பான் . monday வீட்ல இருந்து கிளம்பி வரனும்னா புலம்பி தள்ளுவான் ...but ரொம்ப பாசமான நண்பன் ... then 1st semester la ஒரு gang war நடந்துட்டு இருந்தது between kutty and ashly gang ( இதை படிச்சா பசங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க... A section பசங்க குட்டி gang here packi booge ellam ashly side...மழை பெய்யும் போது 1st floor la பசங்க RAMP WALK பண்ணுவாங்க செம ஜாலி யா இருக்கும் ...

அப்புறம் முக்கியமான விஷயம் னா chemistry sir J.S என்னுடைய தமிழ் மீடியம் inferiority ஐ போக்கியவர்.1st internal la fail ஆனதும் கொஞ்சம் தெம்பா பேசினார். degree clear பண்றதுக்கு initial thrust அவர் தான் காரணம்.

எங்க wing அ எல்லோரும் பேய் wing nu சொல்லுவாங்க , ரூம் no 122 la naan,aravindan ,jayavel,bruce, piliran room 123 la harish booge teja senthil soukath 126 la sivapagan anantha praveen rajkumar senthil nathan 127 la ashly sam nithin ajay last ah GRINDER வந்தான். முதலில் பார்க்க பழம் மாதிரி இருந்தான்.but அப்புறம் தான் தல எவ்ளோ பெரிய ஆள் னு தெரிந்தது

1st yr la interesting incidents na அது ashly aravind suspension தான் .then ashly னா something spl for seniors too, so 1st sem la collar ஐ தூக்கிட்டு கொஞ்சம் rowdyism பண்ணது உண்மைதான்
பூர்ணலிங்கம் enga wing side வந்து செமயா காமெடி பண்ணுவான் , சிவவசந்த் ஐ செமயா ஒட்டுவான் . train incident சொல்லுவான் (myself and soukath dress exchanging) செம காமெடி

aravindan (baasha baai )செம காமெடி பண்ணுவான். internals படிச்சிட்டு இருப்போம் ,திடீர்னு "mudha!!!! mudha!!!!! bombay airportlathan parthan. parthavudane hai appadinu sonna nanum HAI nu sonnan planela partha yenaku pakathu seatla SANIA pesa arambicha pesa arambicha CHENNAI airportvara pessikitae vandha..................apparam i LOVE U nu sonna nan mudiyava mudiyathunu sollitane............aparam yenna phone mela போன்" இப்படி கஜினி வசனம் பேசுவான் , அப்புறம் இது நாடாமை தீர்ப்பு னு சொல்லி tone change panni பேசுவான் .

அப்புறம் எங்க "ஆறு " கார்த்திக் (Bruce) அவருக்கு ஒரு ஹெல்ப் பண்றதுக்கு ஒரு gang prepared ஆ இருக்கும், மதன் , பாக்கி, சதீஷ் எல்லோரும் ரூம் ல உட்கார்ந்து அவனுக்கு actions உடன் ஐடியா கொடுப்பாங்க .



then booge பத்தி சொல்லனும். booge அப்பா hostel ku வந்தா enga wing ரொம்ப பரபரப்பா இருப்போம் . அப்பா கிளம்பியதும் ,snacks ku sema செம சண்டை நடக்கும்.ஒரு நாள் அவங்க அப்பா கிளம்பியதும் தேஜா அவங்க ரூம் அ பூட்டிட்டான்.உடனே grinder கதவை உடைச்சி செம ரகளை பண்ணிட்டான்.

பிளிரன் (அரவிந்தன் ) மெப்கோ ல என்னோட 1st friend from the BE admission ...

ஒரு ருசிகரமான சம்பவம் :
GRINDER'S BIRTHDAY
DECEMBER 14 WEDNESDAY NIGHT grinder b'day ku prepare பண்ணோம் . night 12 மணிக்கு cake அ cut பண்ணினோம் ,உடனே பாக்கியராஜ் (கொலைகாரன்) கேக் ஐ எடுத்துட்டு grinder face la அடிகிறதுக்கு துரத்தினான், அப்போ சிவவசந்த் பாத்துட்டு 1st floor வந்துட்டார் .வந்து 20 பேரிடமும் விசாரணை நடத்தினார். அதுல அனந்தா மாட்டினது தான் காமெடி "அவன் கேக் சாப்டுட்டு வந்து பெட் சீட் போட்டு தூங்கிட்டான். சிவ வசந்த் அனந்தா வை எழுப்பினார் , அவன் தூக்க கலக்கத்துடன் எந்திரிச்சு என்ன சார் ? னு ரொம்ப சாது வா கேட்டான் , அவர் அவன் கையை பிடிச்சு மோதிரத்தை பார்த்தார் அதுல கேக் ஒட்டி இருந்தது , உடனே வேற ஒண்னும் சொல்லலை ,கீழே போ ! matter over.

then most of our guys were fined 250 rupees. இந்த incident அனந்தா வை பல இடங்களில் பின்னடைய செய்து விட்டது ....

then 1st yr study holidays 20days over
லீவ் முடிஞ்சு வந்ததும் ஒவ்வொரு எக்ஸாம் கும் ஒரு நாள் தான் லீவ் . ஆனாலும் அந்த லீவ் ல தான் எல்லா பசங்களும்,பொங்கல் ரிலீஸ் படம் லாம் பார்த்து முடிச்சோம் ,
27th December night எங்க பசங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது , அதாவது Trisha best or Asin best aa (இதுக்கு சாத்தப்பன் பதில் சொன்னா நல்லா இருக்கும்)
30th ஜனவரி ல வெற்றிகரமா ஒரு செமஸ்டர் அ முடிச்சிட்டோம் .