Tuesday, August 18, 2009

SUPERSTARS 1

SUPERSTAR

எனக்கு ரொம்ப நாளா இருக்குற ஒரு கேள்வி சூப்பர் ஸ்டார் இந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் யார் ? எனக்கு ரஜினியை பிடிக்கும் , கமல் , விஜய்,அஜித், அமிதாப் , சிரஞ்சீவி,மகேஷ் பாபு , ஷாருக் கான் , ஆமிர் கான்,சல்மான் கான் , சூப்பர் ஸ்டார்ஸ் பற்றி பார்க்கும் முன்பு இந்த ஸ்டார்ஸ் பற்றி எனக்கு தெரிந்ததை உங்களுடன் , பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ,

விஜய்:
அப்பா ஒரு பிரபல இயக்குனர் , அம்மா ஒரு பின்னணி பாடகி ,என்றிருந்த விஜய் க்கு சினிமா வாய்ப்பு, அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை , தனது சொந்த கம்பெனி யில் தனது மகனை ஹீரோ வாக்கினார் சந்திரசேகர் அவர்கள்.... எப்போதுமே அவர் படங்களில் புரட்சி என்ற ஒரு கதை யை சொல்லுவார்

அதே போல் தான் தனது மகனின் முதல்(நாளைய தீர்ப்பு) படத்திலும் தனது புரட்சி கதையை உபயோகபடுத்தினார்.ஆனால் குருவி தலையில் பனங்காய் ஐ சுமக்க முடியவில்லை , படம் DECLARED AS FLOP,

ஆனால் மறுபடியும் மகனை வைத்து படம் (செந்தூர பாண்டி)எடுக்க நினைத்தார் , COMMERCIAL ASPECTS தான் படத்துக்கு முக்கியம் என்று நினைத்து , கேப்டன் விஜயகாந்திடம் கதை சொல்லி அவருடன் விஜய் ஐ நடிக்க வைத்தார் , எதிர்பார்த்தபடியே படம் ஹிட், வெற்றிக்கு முழு காரணம் விஜயகாந்த் என்பது பலருக்கு தெரிந்த ஒரு விஷயம்.

அடுத்த விஜய் படம் ரசிகன் , முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் தான் அது, நம் அனைவருக்கும் தெரிந்த படம் தான் அது.இந்த படமும் ஓரளவுக்கு நன்றாக தான் ஓடியது (விஜய் முதலில் சொந்த குரலில் பாடியது இந்த படத்தில் தான் )

அடுத்து தேவா, ராஜாவின் பார்வையிலே.விஷ்ணு , சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை,எல்லாம் சுமாராக ஓடிய படங்கள் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் சிறிது சிறிதாக அதுவும் குழந்தைகளின் மனதில் பசு மரத்தாணி போல் பதிய ஆரம்பித்து விட்டார்.இவற்றில் ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் விஜயும் அஜித்தும் முதலும் கடைசியுமாக இணைந்து நடித்த படம்

விஜய் film career la யே பூவே உனக்காக ஒரு turning point ஆ அமைந்தது, அதற்கு விக்ரமன் என்ற மாபெரும் இயக்குனரின் உழைப்பு , B & C centre audience ஐ எப்படி வசப்படுத்தனும் அப்படிங்கற ஒரு technique விக்ரமன்க்கு நல்லா தெரியும்.அந்த படம் 275 நாட்கள் தாண்டி ஓடினது னா அதுக்கு கதை ஒரு முக்கிய காரணம் , எந்த ஒரு படம் B,C audience க்கு பிடிக்குதோ அந்த படத்துக்கு casting oru problem இல்லை .பூவே உனக்காக படம் பல மொழிகளில் remake செய்யப்பட்டு நல்ல வெற்றியை பெற்றது .நம்ம age பசங்களுக்கு விஜய் ஐ இந்த படத்தில் இருந்துதான் பிடிக்க ஆரம்பித்தது , ரொம்ப பஞ்ச் வசனங்கள் இல்லை , அந்த 96 la ஒரு trend இருந்தது ,அதாவது லவ் dialogues வித விதமா படத்தில பேசுவாங்க , பாத்து காதல், பாக்காம காதல் னு ஓவரா இருக்கும் , ஆனால் இந்த படத்தில "ரோஜா வை வச்சி வசனம் பேசி படத்தை வெள்ளி விழா கொண்டாட வைத்தது.
விஜய்க்கும் ஆர்.பி.சௌத்ரி யும் வெற்றி கூட்டணி ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான்

அடுத்து வசந்த வாசல்,மாண்புமிகு மாணவன்,செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ் மோர் வரைக்கும் சுமாரான படங்கள் , ஆனால் முன்பு சொன்ன மாதிரி அஸ்திவாரம் வெயிட் ஆ போட்டு விட்டார்.

லவ் டுடே விஜயின் இன்னொரு வெற்றிப்படம் ,அதே ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு , இந்த படம் தெலுங்கில் பவன் கல்யான் நடித்து remake செய்யப்பட்டு வெற்றியை பெற்றது,

இந்த ரீமேக் concept அ ரொம்ப படங்களில் விஜய் follow பண்ணினார்

காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய்,நெஞ்சினிலே,பிரியமானவளே,ப்ரண்ட்ஸ்,பத்ரி,ஆதி,வசீகரா,போக்கிரி , வில்லு வரைக்கும் ரீமேக் டெக்னிக் தான் ........

ஆனால் படம் வெற்றி என்பது இப்போ பந்தயம் மாதிரி ஆகி விட்டது.முப்பது கோடி செலவு பண்ணி படம் எடுத்தால் லாபம் வர முதல்ல நாம் கதைய நம்பனும், நல்ல கதை அமைஞ்சாலும் இப்போ making oru periya problem

கதைய நம்பனும் னா பட்ஜெட் ல தான் படம் எடுக்கனும்........

விஜயை பற்றி நிறைய சொல்லலாம் .ஆனால் நம்ம பசங்க திட்டுவாங்க

so உங்க replies வச்சி தான் இனி நம்ம பேச முடியும் ...........

1 comment:

  1. hi da prabha how are u? wonderful narration da...keep blogging in tamil...expecting more from u..

    ReplyDelete